ஆர்யாவின் டெடி 50வது நாள்- ஓடிடியில் வசூல் சாதனை
ADDED : 1619 days ago
சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஆர்யா-சாயிஷா, மகிழ்திருமேனி, கருணாகரன், சதீஷ் நடிப்பில் உருவான படம் டெடி. இப்படம் கடந்த மார்ச் 12-ந்தேதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் இன்றோடு டெடி படம் ரிலீசாகி 50 நாட்கள் ஆகிறது.
இதையடுத்து அப்படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், டெடி படம் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பினை பெற்று நல்ல வசூலை கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார்கள். அதோடு, ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் டெடி படமும் இடம் பிடித்து சாதனை செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆக, தியேட்டர்களில் படங்கள் 50 நாட்கள் ஓடியதை சாதனையாக கொண்டாடிய காலம் மாறி, இப்போது ஓடிடியில் 50 நாட்கள் ஓடியதைகூட சாதனையாக கொண்டாடும் காலமாக மாறியிருக்கிறது.