உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொரோனாவை எட்டி உதைத்த பூஜா ஹெக்டே

கொரோனாவை எட்டி உதைத்த பூஜா ஹெக்டே

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பூஜா ஹெக்டே, தற்போது தமிழில் விஜய்யின் புதிய படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸுடன் 'ராதேஷ்யாம்' படத்திலும் நடித்து வரும் பூஜா சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா நெகட்டிவ் என்று வந்தபின் அதைப் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

“உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி, நான் நன்றாக குணமடைந்துவிட்டேன். முட்டாள் கொரோனாவை அதன் பின் பக்கத்தில் நன்றாக உதைத்துவிட்டேன், கடைசியாக நெட்டிவ் என பரிசோதனையில் வந்துவிட்டது. ஹே...., உங்கள் அனைவரது விருப்பமும் குணப்படுத்தும் ஆற்றலும் அதன் மேஜிக்கை நிகழ்த்திவிட்டது என நினைக்கிறேன். என்றென்றும் நன்றி, பாதுகாப்பாக இருங்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டே கொரோனா பாதிப்பிலிருந்து நலமடைந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !