உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வயிற்றுபோக்கு : மருத்துவமனை அட்மிட் முதல் வீடு திரும்பிய வரை யுடியூப்பில் பிரியங்கா டிரெண்ட்

வயிற்றுபோக்கு : மருத்துவமனை அட்மிட் முதல் வீடு திரும்பிய வரை யுடியூப்பில் பிரியங்கா டிரெண்ட்

விஜய் டி.வியின் நட்சத்திர தொகுப்பாளினி பிரியங்கா. அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் பிரியங்கா வயிற்றுபோக்கு பிரச்சினையால் தனியார் மருத்துவமனையில் மூன்று நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் வீடு திரும்பிய வரை மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை வீடியோவாக தனது யுடியூப்பில் வெளியிட்டுள்ளார். இந்த கோவிட் காலத்தில் மக்களை என்டடெயின்ட்மென்ட் பண்ணும் விதமாக குறிப்பாக கொரோனாவை எதிர்த்து போராடும் முன்கள பணியாளர்களுக்காக சற்றே நகைச்சுவை கலந்து வீடியோவாக வெளியிட்டார். அந்த வீடியோக்கள் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது.

தற்போது பிரியங்கா நலமுடன் வீடு திரும்பி விட்டார். விரைவில் விஜய் டிவியில் தனது நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !