உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசை ஆல்பத்தில் ஷிவானி

இசை ஆல்பத்தில் ஷிவானி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3வது சீசனில் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி. அந்த தொடரில் காயத்ரி என்ற வேடத்தில் நடித்தார். அதை தொடர்ந்து பகல் நிலவு தொடரில் கதாநாயகியாக நடித்தார். இதுதவிர கடைகுட்டி சிங்கம், என்ற தொடரில் நடித்தார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடரான இரட்டை ரோஜா என்ற தொடரில் அபி மற்றும் அனு என்ற இரட்டை கதாபாத்திரத்தில் 168 அத்தியாயங்கள் வரை நடித்தார். பின்னர் அந்த தொடரில் இருந்து விலகி விட்டதால் தற்போது அவருக்கு பதிலாக நடிகை சாந்தினி தமிழரசன் நடித்து வருகிறார்.

மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பி, பிக்பாஸ் 4வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். தற்போது விளம்பர படங்களில் நடித்து வரும் ஷிவானி. சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

தனிப்பட்ட சிங்கிள் இசை ஆல்பங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பலரும் இதுபோன்ற முயற்சியில் இறங்கி உள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக ஆக்சிஸ் பிலிம் பேக்டரி போதையில் தள்ளாதே என்ற ரொமாண்டிக் இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளது. இதில் ஷிவானி ஆடி நடித்துள்ளார். அவருடன் பூர்னேஷ் நடித்துள்ளார். இசையமைப்பாளார் அருண் ராஜ் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பேச்சிலர் பட இயக்குநர் சதீஷ் செல்வகுமார். பாடலை எழுதி உள்ளர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !