உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை

சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி'. இந்த படத்தின் தலைப்பு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பராசக்தி படத்தின் தலைப்பு. தமிழ் சினிமாவில் காலத்திற்கும் அழிக்க முடியாத காவியமாக உள்ள இந்த படத்தின் தலைப்பை வைத்ததற்கு ஏற்கனவே பல விமர்சனங்கள் உள்ளது.

தற்போது பராசக்தி படக்குழு சிவாஜி கணேசனை நினைவூட்டும் வழியில் அந்த படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர். இதற்கு சிவாஜி சமூக நலப்பேரவை கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன்படி, சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் விளம்பரத்திற்கு சிவாஜியின் பெயர் மற்றும் படத்தை பயன்படுத்த நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை கண்டனம். தனியார் நிகழ்ச்சியில் தீ பரவட்டும் என்கிற வசனத்துடன் சிவகார்த்திகேயனுக்கு சிவாஜி தீ பந்தம் கொடுப்பது போன்ற படம் பரிசாக வழங்கப்பட்டது. அடுத்தவரின் உழைப்பில், பெயரில் குளிர்காய்ந்து, எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என சிவகார்த்திகேயன் உள்ளார். சிவகார்த்திகேயனுக்கு நடிகர் திலகத்தின் வாரிசு என்ற ரீதியில் விளம்பரப்படுத்திக் கொள்ள யார் அதிகாரம், அனுமதி கொடுத்தது? மனசாட்சி தேவையில்லை, பணம் மட்டும் போதும் என பராசக்தி படக்குழு உள்ளது என நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை கண்டன விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !