மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1580 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1580 days ago
டிக்டாக் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. தற்போது சுந்தரி என்ற தொடரில் நடித்து வருகிறார். இயற்கையிலேய கருப்பு நிறம், களையான முகம் கொண்ட கேப்ரில்லா அதேப்போன்ற ஒரு கேரக்டரில்தான் சுந்தரி தொடரில் நடித்து வருகிறார். டிக்டாக்கை தொடர்ந்து சின்னத்திரையிலும் அவருக்கு ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
கேப்ரில்லா முதன் முறையாக ஒரு திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தின் டைட்டில் என்4. இதில் கேப்ரில்லாவுடன் அனுபமா குமார், அக்ஷய் கமல், மைக்கேல் தங்கராஜ், அப்சல் ஹமீது, வினு ஷா, வடிவுக்கரசி உள்பட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் குமார் இயக்கியுள்ளார். இதில் மீனவ பெண்ணாக கேப்ரில்லா நடித்திருக்கிறார். அனுபமா குமார் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இதுபற்றி தமது கேப்ரில்லா தமது இன்ஸ்டாகிராமில் , கதைக்கு ஏற்ற நாயகியாக நான் அறிமுகம் ஆகும் முதல் படம் என்4 என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தமது மஜா தனியிசை ஸ்ட்ரீமிங் தளத்துக்காக உருவாக்கியுள்ள மூப்பில்லா தமிழே தாயே பாடலை ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் சமீபத்தில் கொரோனா நோய் தொற்றுக்கும் ஆளாகி அதிலிருந்து மீண்டு வருகிறார்.
1580 days ago
1580 days ago