மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1580 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1580 days ago
தலைவி படத்தின் கதாநாயகியான நடிகை கங்கனா ரணவத், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து இரு தினங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உங்கள் சக்தியை மீறி எதையும் விட வேண்டாம். நீங்கள் பயந்தால் அது உங்களை பயமுறுத்தும். கோவிட்டை அழிக்க வாருங்கள், அது சாதாரண சிறிய ப்ளு போன்றது. அது நம் மீது அதிகப்படியான அழுத்ததையும் மனரீதியாக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது,” எனப் பதிவிட்டிருந்தார்.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கொரோனா நோயைப் பற்றி சிறிய ப்ளு என கங்கனா தவறாகக் குறிப்பிட்டுள்ளார் என அந்தப் பதிவிற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்தக் குறிப்பிட்ட பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கிவிட்டது.
தன்னுடைய பதிவு நீக்கியது தொடர்பாக தன்னுடைய கண்டனத்தை வழக்கம் போல கிண்டலாகப் பதிவு செய்துள்ளார் கங்கனா. சமீபத்தில்தான் கங்கனாவின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக டுவிட்டர் நிறுவனம் முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
1580 days ago
1580 days ago