ராதா மோகனின் 'மலேஷியா டூ அம்னீஷியா' மே 28ல் வெளியீடு
ADDED : 1611 days ago
மொழி, அபியும் நானும் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ராதா மோகன் தற்போது எஸ்.ஜே.சூர்யாவை வைத்து பொம்மை என்ற படத்தை இயக்கி உள்ளார். அதோடு ஓடிடி தளத்திற்காகவும் ஒரு படம் இயக்கி உள்ளார். 'மலேஷியா டூ அம்னீஷியா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் லாக்கப் படத்திற்கு பிறகு வைபவ் , வாணி போஜன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இதில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரேம்ஜி அமரன் இசை அமைத்துள்ளார். மங்கி மேன் கம்பெனி தயாரித்துள்ளது. ஜீ5 ஓடிடி தளத்திற்கென்றே தயாராகி உள்ள இந்தப் படம் வருகிற 28ந் தேதி வெளிவருகிறது என்று ஜீ5 நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.