உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஷ்மிகாவிற்கு ஹிந்தி பட வாய்ப்பை பெற்று தந்த டியர் காம்ரேட்

ராஷ்மிகாவிற்கு ஹிந்தி பட வாய்ப்பை பெற்று தந்த டியர் காம்ரேட்

தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் ஹிந்தி சினிமாவில் நடிப்பதற்கு காரணமே தெலுங்கில் நடித்த டியர் காம்ரேட் படம் தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த படத்தைப்பார்த்த பாலிவுட் பட இயக்குனர் சாந்தனு பாக்சி, டியர் காம்ரேட் படத்தில் நான் வெளிப்படுத்தியிருந்த அப்பாவித்தனமான நடிப்பும், எனது அழகும் தன்னை கவர்ந்ததாக கூறினார். தனது மிஷன் மஜ்னு படத்தின் கதாநாயகி வேடத்திற்கு தேவையான அனைத்தும் என்னிடம் தெரிந்ததாகவும், அதனால் தான் மிஷன் மஜ்னு படத்தில் தன்னை நடிக்க வைத்ததாகவும் அவர் கூறியதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தான் அமிதாப்பச்சன் உடன் குட்பை படத்தில் நடிப்பதற்கு தன்னை ஒப்பந்தம் செய்தாகவும் கூறியுள்ளார் ராஷ்மிகா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !