19 ஆண்டுகளுக்கு பின் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஷாருக்கான்?
ADDED : 1611 days ago
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கானின் படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகப்போகிறது. தற்போது பதான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை அடுத்து அவர் பிரபல இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி டைரக்சனில் நடிக்கப்போகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2002ல் வெளியான தேவதாஸ் படத்தில் முதன்முறையாக சஞ்சய்லீலா பன்சாலி டைரக்சனில் நடித்திருந்தார் ஷாருக்கான். அந்தவகையில் 19 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். காதல் கதையாக உருவாகும் இந்தப்படத்தில், தனது காதலை தான் காதலிக்கும் பெண்ணிடம் உணர்த்துவதற்காக உலகத்தில் உள்ள பாதி நாடுகளுக்கு மேல் சுற்றி அலையும் ஒரு இளைஞன் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ளாராம்.