சிவகார்த்திகேயன் படங்களின் நடித்த காமெடி நடிகர் பவுன்ராஜ் மரணம்
ADDED : 1609 days ago
‛ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த காமெடி நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார்.
சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் உருவான அனைத்து படங்களிலும் கட்டாயம் இடம் பிடித்தவர் பவுன் ராஜ். வருத்தப்படாத வாலிபர் சங்கர், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயன் - சூரி நடத்தும் டீ-கடையில் வாழைப்பழத்தை பிக்கிறேன் என்ற பெயரில் ஒட்டுமொத்த கடையையே காலி பண்ணும் கேரக்டரில் நடித்து இருந்தார். அதேப்போன்று சீமராஜா படத்தில் வில்லனாக வரும் லாலின் உடன் இருக்கும் முக்கிய நபராக நடித்து இருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று(மே 15) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.
பொன்ராம் இரங்கல்
இதுப்பற்றி இயக்குனர் பொன்ராம் டுவிட்டரில், ‛‛வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள் என பதிவிட்டுள்ளார்.
சூரி இரங்கல்
நடிகர் சூரி டுவிட்டரில், ‛‛அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு , அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன்! அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
நடிகர் சூரி டுவிட்டரில், ‛‛அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு , அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன்! அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
கடந்த ஒன்றரை மாத காலத்திற்குள் எஸ்.பி.ஜனநாதன், விவேக், கே.வி.ஆனந்த், பாண்டு, பாடகர் கோமகன், ஜோக்கர் துளசி, மாறன், நெல்லை சிவா உள்ளிட்ட பல பிரபலங்கள் மறைந்துவிட்டனர். இப்போது இவரின் மரணமும் சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.