சரியான நேரத்தில் உதவி செய்து 30 உயிர்களை காப்பாற்றிய சோனு சூட்
ADDED : 1610 days ago
பாலிவுட் நடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டதில் இருந்தே ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். அவரது அந்த உதவி இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அந்தவகையில், கொரோனா இரண்டாவது அலையின்போது பலருக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி வரும் சோனு சூட், சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசரமாக தேவைப்படுகிறது என்கிற தகவல் தனக்கு கிடைத்ததும் உடனடியாக அனுப்பி வைத்து 30 உயிர்களை காப்பாற்றியுள்ளார்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் ரீமா சுவர்ணா மற்றும் சிகிச்சை கொடுத்த மருத்துவமனை நிர்வாகமும் சரியான நேரத்தில் உதவி செய்து 30 பேரை காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.