ஒன்றாக எதிர்த்து போராடுவோம் - ரகுல் பிரீத் சிங்
ADDED : 1651 days ago
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்துள்ள நடிகைகளில் ரகுல்பிரீத்சிங் குறிப்பிடத்தக்கவர். அதையடுத்து அனைவரும் வாருங்கள் கொரோனாவை எதிர்த்து போராடுவோம் என்று தனது இன்ஸ்டாகிராமில் செய்தி வெளியிட்டுள்ள ரகுல்பிரீத்சிங், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குபவர்களையும் வரவேற்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதோடு அவர் வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில் நான் எப்போதுமே தோல்வியைக்கண்டு பயப்படமாட்டேன். எதிர்நீச்சல் போடுவேன். அதனால்தான் ஆரம்பத்தில் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்தித்த நான் இப்போது வெற்றிப்பட நடிகையாக வலம் வருதுகிறேன். எனது சினிமா கனவுகள் இப்போதுதான் நனவாகத் தொடங்கியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் ரகுல்பிரீத்சிங்.