உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாராவின் புதிய படத்தை இயக்கப்போவது இவரா?

நயன்தாராவின் புதிய படத்தை இயக்கப்போவது இவரா?

தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படங்களுக்கு முன்பே தனது ரவுடி பிக்சர்ஸ் பேனரில் அவர் நடித்து முடித்துள்ள நெற்றிக்கண் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் அடுத்தபடியாக ஈரம் அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே அறிவழகனிடத்தில் கதை கேட்டு ஓகே பண்ணி வைத்திருந்தபோதும் கொரோனா தொற்று போன்ற காரணங்களால் அவர் படத்தில் நடிப்பது தாமதமாகி வந்திருக்கிறது. இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்ததும் அவரது இயக்கத்தில் நடிக்க நயன்தாரா தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

ஈரம், வல்லினம், ஆறாது சினம் படங்களைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் குற்றம்-23 படத்தை இயக்கிய அறிவழகன் மீண்டும் அவர் நடிப்பில் தற்போது பார்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !