உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ்நாட்டு மருமகளாக விரும்பும் ராஷ்மிகா

தமிழ்நாட்டு மருமகளாக விரும்பும் ராஷ்மிகா

தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ராஷ்மிகா மந்தனா தமிழில் சுல்தான் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். தனது திருமணம் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள இவர், ‛‛தமிழ் கலாச்சாரமும், அதன் பாரம்பரியமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. குறிப்பாக இங்குள்ள உணவை அதிகமாக விரும்புகிறேன். தமிழர் ஒருவரை திருமணம் செய்து நிச்சயம் ஒருநாள் தமிழ்நாட்டு மருமகளாவேன்'' என தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய படங்களில் மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் கால்பதித்து, அங்கும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !