நாக் அஸ்வின் படத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்த பிரபாஸ்
ADDED : 1702 days ago
தற்போது சலார், ஆதி புருஷ், ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் சலார் படத்தில் நடிப்பதற்கு முன்பே மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லர் படத்தில் நடிப்பதாக இருந்தார் பிரபாஸ். ஆனால் திடீரென்று சலார் படத்தில் கமிட்டாகி விட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டே தொடங்க வேண்டிய நாக் அஸ்வினின் திரில்லர் படம் தற்போது நிலவும் கொரோனா சூழலால் இந்த ஆண்டும் தொடர முடியாது சூழல். எனவே இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளி வைத்துள்ளார் பிரபாஸ். இப்படத்தை 2022 ஜனவரியில் தொடங்கி 2023ம் ஆண்டில் வெளியிட தற்போது திட்டமிட்டுள்ளனர்.