ஆக்சிஜன் பேங்க் திறக்கும் சிரஞ்சீவி - ராம்சரண்
ADDED : 1683 days ago
கொரட்டல்லா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி - ராம்சரண் இணைந்து நடித்து வரும் படம் ஆச்சார்யா. கொரோனா இரண்டாவது அலை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தனது சிரஞ்சீவி ரத்த வங்கி மூலம் ஏராளமானவர்களுக்கு உதவி செய்து வரும் சிரஞ்சீவி தற்போது தனது மகன் ராம்சரணுடன் இணைந்து ஆக்சிஜன் பேங்க் ஒன்றை தொடங்குகிறார். தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கொரோனா தொற்று அதி வேகமாக பரவிக் கொண்டிருப்பதால் சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கும் பேங்கினை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்குகிறார் சிரஞ்சீவி. கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜனை சிரஞ்சீவியின் இந்த ஆக்சிஜன் பேங்கில் இருந்து பொதுமக்கள் நேரடியாக பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.