சமந்தாவை பாராட்டிய கங்கனா
ADDED : 1636 days ago
சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள தி பேமிலிமேன் 2 வெப் தொடரின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி பாராட்டுக்களையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக, இந்த தொடர் தமிழர்களையும், எல்டிடிஇ அமைப்பையும் தவறாக சித்தரித்துள்ளதாக சோசியல் மீடியாவில் அதற்கு எதிரான கருத்துக்கள் வெளியாகின. இந்த தொடரில் சமந்தா எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணாக நடித்துள்ளார்.
சமந்தாவின் துணிச்சலான கேரக்டரை பாலிவுட்டில் பலர் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக, தலைவி படத்தில் நடித்துள்ள நடிகை கங்கனா ரணாவத், தி பேமிலிமேன்-2 தொடரின் டிரைலரின் கிரீன்ஷாட்டை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, இந்த பெண்ணுக்கு என் இதயம் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.