உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நெற்றிக்கண் - கேஜிஎப்-2 : வளரும் சரண் சக்தி

நெற்றிக்கண் - கேஜிஎப்-2 : வளரும் சரண் சக்தி

தனுஷ் நடித்த வடசென்னை படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பியாக, தனது துறுதுறு நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சரண் சக்தி குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், தற்போது டீன் ஏஜ் பருவத்தை தாண்டியுள்ள நிலையில், அவரைத்தேடி சில பெரிய படங்களின் வாய்ப்புகள் வந்து உள்ளது. அந்த வகையில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சரண் சக்தி.

அதுமட்டுமல்ல, மிகப்பெரிய வெற்றிபெற்ற கேஜிஎப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் சரண் சக்தி. அந்த படத்தின் ஹீரோ யஷ் உடன் இணைந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த படங்கள் வெளியானால் அடுத்ததாக நிறைய சோலோ ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் இவரைத் தேடி வரும் என நம்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !