சூரிய உதயத்தை ரசிக்கும் காஜல் அகர்வால்
ADDED : 1643 days ago
கொரோனா ஊரடங்கு அனைவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கிறது. பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்கும் வீட்டுக்குள்ளேயே இருந்து வேலை பார்ப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.
வெளியில் சென்று வாக்கிங் போகக் கூட பலர் தயங்கி வருகிறார்கள். வீட்டின் மாடியில் சென்று வாக்கிங் போவதைத்தான் இந்த ஊரடங்கு காலத்தில் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை.
நடிகை காஜல் அகர்வால் மும்பையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இன்று காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து தனது பால்கனியில் நின்று கொண்டு சூரிய உதயத்தை ரசித்து “வெள்ளிக்கீற்றைத் தேடுகிறேன், சூரிய உதயம் எனது பாக்கெட்டில், நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார். மேக்கப் இல்லாமல் காலை நேரத்திலும் அழகாகத்தான் இருக்கிறார் காஜல்.