தயாரிப்பாளரானது எப்படி - வைபவ்
ADDED : 1593 days ago
துணை நடிகராக இருந்து நாயகனாக உயர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் வைபவ். ஜீ5 உடன் இணைந்து மலேசியா டூ அம்னீஷியா படத்தை வைபவ் தயாரித்துள்ளார். இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். படம் வரும் 28 ம் தேதி ஜீ5 வெளியாகிறது.
படம் குறித்து வைபவ் அளித்த பேட்டி: இந்த நேரத்தில் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் இப்படம் இருக்கும். பொய் சொல்லி அதிலிருந்து குடும்பத்தாரிடமிருந்து நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதை ஜாலியாக, குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையில் சொல்லியுள்ளோம். இப்படத்தில் நடிக்கவே நான் வந்தேன். அதன் பின், கொரோனா இடைவெளி வந்தது. இந்நிலையில், நானே தயாரிக்க முன்வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.