உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகருக்கு அறிவுரை கூறிய அனைகா சோதி

ரசிகருக்கு அறிவுரை கூறிய அனைகா சோதி

காவியத்தலைவன், பாரிஸ் ஜெயராஜ் படங்களில் நடித்தவர் அனைகா சோதி. ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் நாற்காலி போட்டோவை பகிர்ந்து 'உங்களை போன்ற அழகான பெண்கள் உட்கார நான் நாற்காலியாக மாற விரும்புகிறேன் என பதிவிட்டார். அவருக்கு, ‛‛உங்கள் பெற்றோர்கள் உங்களை டாக்டர், இன்ஜினியராக பார்க்க ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். ஆனால் நீங்கள் வெறும் ரூ.200 நாற்காலியாக இருக்க ஆசைப்படுகிறீர்கள். இதெல்லாம் நன்றாகவா உள்ளது. ஒழுங்காக நன்றாக படித்து முன்னேற பாருங்கள்'' என அறிவுரை வழங்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !