உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தன் வாழ்க்கை பயோபிக் : பி.சுசீலா ஆசை

தன் வாழ்க்கை பயோபிக் : பி.சுசீலா ஆசை

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா. இந்தியாவின் பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையிலும் இடம் பிடித்தவர். ஏ.ஆர்.ரஹ்மான் கதை, தயாரிப்பு, இசையில் சமீபத்தில் வெளியான ‛99 சாங்ஸ்' படத்தை ஒடிடியில் இவர் பார்த்துள்ளார்.

இதுப்பற்றி ரஹ்மான் கூறுகையில், ‛‛படம் நன்றாக இருக்கிறது என சுசீலா அம்மா கூறினார். இதேப்போன்று அவரின் கதையையும் உருவாக்கணும், அதற்கு நான் உதவ முடியுமா என கேட்டார். பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடிய ஆளுமைகளில் ஒருவர் என் படத்தை பாராட்டியது பெருமையாக இருந்தது'' என்றார் ரஹ்மான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !