மற்றுமொரு சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல்
ADDED : 1638 days ago
வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் இசையில் உருவாகி உள்ள படம் ‛கூழாங்கல்'. நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளனர். குடிகார தந்தைக்கும் - மகனுக்கான உறவை சொல்லும் படம் இது. ஏற்கனவே ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று விருது வென்ற இப்படம், இப்போது மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்வாகி உள்ளது. இந்த படம் மே 29-ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.