மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1554 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1554 days ago
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் ஓமர் லுலு. இந்த படத்தில் இடம் பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடலில் தான், தனது வித்தியாசமான புருவ சிமிட்டல் மூலம் பிரபலமானார் பிரியா வாரியர். இந்தப் பாடல் மலையாளத்தில் பிரபலமான 'மாப்பிள்ளை பாடலை' தழுவி உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இதே போன்று இன்னொரு மாப்பிள்ளை பாடலை வீடியோ பாடலாக இயக்கி வெளியிட்டுள்ளார் ஓமர் லுலு.
இந்த பாடலை பார்த்த மோகன்லால், இந்த மாப்பிள்ளை பாடலின் புதிய வெர்சனை பாராட்டியதுடன், மாப்பிள்ளை பாடலுக்கு நான் எப்போதும் ரசிகன் என்றும் கூறியுள்ளார். மோகன்லாலின் பாராட்டை சந்தோசத்துடன் பகிர்ந்துள்ளார் இயக்குனர் ஓமர் லுலு. இந்த இரண்டு மாப்பிள்ளை பாடல்களையும் பாடியவர் நடிகரும், இயக்குனருமான வினித் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது
1554 days ago
1554 days ago