மேலும் செய்திகள்
பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா
1554 days ago
'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம்
1554 days ago
அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு
1554 days ago
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ், ஒரு பக்கம் இயக்குனராக மாறியதுடன் இன்னொரு பக்கம் பிரித்திவிராஜ் புரடக்சன்ஸ் என்கிற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தையும் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது பாபி சிம்ஹா மற்றும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள '777 சார்லி' என்கிற கன்னட படத்தின், மலையாள பதிப்பை பிரித்விராஜ் வெளியிடுகிறார்
இதற்கான பணிகள் துவங்கப்பட்டு, மலையாளத்தில் பாடல்கள் ரெக்கார்டிங் செய்யப்பட்டு விட்டன. இயக்குனரும், நடிகருமான வினித் சீனிவாசன் இந்த படத்தின் பாடல்களை பாடியுள்ளார். இதுகுறித்து பிரித்விராஜ் கூறும்போது, “சார்லி 777 படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். இந்த படத்தை எங்கள் நிறுவனம் மூலமாக வெளியிடுவதில் எவ்வளவு மகிழ்ச்சி என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது” என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்திமாக இடம் பெறும் நாயுடன் பிரித்விராஜ் இருப்பது போன்ற ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பாபி சிம்ஹா முதன்முறையாக கன்னடத்தில் நடித்துள்ள படம் இது ஹீரோவான ரக்ஷித் ஷெட்டி கன்னட நடிகர் என்றாலும் பாபிசிம்ஹா நடித்திருப்பதால் இந்த படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.
1554 days ago
1554 days ago
1554 days ago