ஷங்கர் படத்தில் மாளவிகா மோகனன்?
ADDED : 1582 days ago
மலையாள சினிமாவில் அறிமுகமாகி ரஜினியின் பேட்ட படத்தில் தமிழுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். அதன்பிறகு விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தவர் தற்போது தனுசுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து தமிழில் புதிய படங்களில் கமிட்டாகாத நிலையில் தற்போது ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பதாக ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.
இதே படத்தில் பாலிவுட் நடிகை ஆலியாபட், ராம் சரணுக்கு ஜோடியாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், மாளவிகா மோகனன் இன்னொரு நாயகியாக நடிக்கிறாரா? இல்லை வேறு ஏதேனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் வெகு விரைவிலேயே இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை டைரக்டர் ஷங்கரும், தயாரிப்பாளர் தில்ராஜூவும் வெளியிடப்போவதாக கூறப்படுகிறது.