உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வரலட்சுமிக்கு தெலுங்கில் அடுத்தடுத்து வாய்ப்பு

வரலட்சுமிக்கு தெலுங்கில் அடுத்தடுத்து வாய்ப்பு

தமிழில் ஒரு ரவுண்ட் வந்துவிட்ட நடிகை வரலட்சுமி அடுத்து தெலுங்கில் பிசியாகி வருகிறார். ரவிதேஜா - ஸ்ருதிஹாசன் நடித்த கிராக் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த வரலட்சுமி அந்த படத்தின் வெற்றி காரணமாக தெலுங்கு ரசிகர்களின் கவனத்துக்கு வந்துவிட்டார். இதனால் அடுத்தடுத்து சில புதிய படங்களில் நடிக்க கமிட்டாகி வருபவர், தற்போது பாலகிருஷ்ணா நடிக்கும் 107வது படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு தயாராகும் இந்த படத்தில் வரலட்சுமி ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தை மித்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !