உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானி பட ரீமேக்கில் சூர்யாவா?

நானி பட ரீமேக்கில் சூர்யாவா?

யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம்குமார். தமிழை விட தெலுங்கில் தான் இவர் அதிகமான வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2019ல் நானி நடிப்பில் கேங்லீடர் என்ற ஆக்சன் படத்தை இயக்கினார். திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவானது. இந்நிலையில் இப்படத்தை தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ள விக்ரம் குமார் முதலாவதாக தமிழில் ரீமேக் செய்யப் போகிறாராம். அதற்காக தனது படங்களில் நடித்த சூர்யா உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களிடம் அவர் கால்சீட் கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !