காதலர் வரைந்த ஓவியத்துடன் ஸ்ருதிஹாசன்
ADDED : 1572 days ago
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ருதிஹாசன். தனது காதலரான ஓவியர் சாந்தனு ஹசரிகா உடன் மும்பையில் உள்ள தனது வீட்டில் லிவிங்-டு-கெதர்-லைபில் இருக்கிறார்.
இந்த கொரோனா ஊரடங்கு தளர்வில் காதலருடன் இணைந்த சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டார். இன்று காதலர் வரைந்த ஓவியங்களுக்கு முன்பாக அமர்ந்து சில போட்டோக்களை எடுத்து அவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தனது காதலைப் பற்றியும், தனது காதல் வாழ்க்கையைப் பற்றியும் எந்தவிதமான ஒளிவு மறைவுமில்லாமல் ஸ்ருதிஹாசன் தனது பர்சனல் வாழ்க்கையைப் பகிர்ந்து வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.