உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புஷ்பா பற்றி ராஷ்மிகா

புஷ்பா பற்றி ராஷ்மிகா

ஹிந்தியில் அமிதாப்பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற மெகா நடிகர்களுடன் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இந்தபடத்தில் தான் நடிக்கும் வேடம் குறித்து இதுவரை தகவல் வெளியிடாமல் இருந்து அவர் தற்போது ஒரு பேட்டியில் அது குறித்து கூறியிருக்கிறார்.

அவர் கூறுகையில், புஷ்பா படத்தில் ஒரு அதிரடியான வேடத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனது கதாபாத்திரமும் அது ஏற்படுத்தும் திருப்பமும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும். கிராமத்து பெண்ணாக நடித்துள்ள எனக்கு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தை கொடுத்திருக்கிறார்கள். அதனால் தெலுங்கு ரசிகர்கள் இதுவரை பார்த்த ராஷ்மிகாவில் இருந்து புஷ்பா படத்தில் முற்றிலும் மாறுபட்ட ராஷ்மிகாவை பார்க்கப் போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !