அல்போன்ஸ் புத்ரனுக்கு பதில் கொடுத்த கமல்
ADDED : 1572 days ago
கமல் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படம் பற்றிய சுவாரஸ்யங்களை சில தினங்களுக்கு முன் கமல் பகிர்ந்திருந்தார். இதற்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், உங்களின் தசாவதாரம் படம் ஒரு பிஎச்டி என்றால், மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு டிகிரி படிப்பு போல. இந்த படத்தையும் எப்படி படமாக்கினீர்கள் என்று கூற முடியுமா'' என கமலுக்கு கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்துள்ள கமல், ‛‛விரைவில் சொல்கிறேன். ஆனால் உங்களால் அதில் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. என்னை பொறுத்தவரை அது ஒரு மாஸ்டர் கிளாஸ் படிப்பு. அதைப்பற்றி இத்தனை ஆண்டுகள் கழித்து பேசுவது எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தரும்'' என்கிறார்.