மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1542 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1542 days ago
கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.
சமீபத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான 'தி பேமிலி மேன் 2' வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த தொடரில் நடிக்க அவர் ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சமந்தா, சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக சம்பளம் காரணமாக நடிகைகள் பார்வை வெப் தொடர்கள் பக்கம் திரும்பி உள்ளது.
ஏற்கனவே மீனா, காஜல் அகர்வால், தமன்னா, நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் முன்னணி கதாநாயகிகளான திரிஷா, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
1542 days ago
1542 days ago