பாத்ரூமில் போட்டோஷூட் நடத்திய அம்ரிதா
ADDED : 1623 days ago
விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அம்ரிதா ஐயர். சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் அமிர்தாவை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் உட்கார்ந்தவாறு இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் போட்டோஷூட் எடுக்க இது தான் சரியான இடம் என்று நினைக்கிறேன் என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பல லைக்குகள் குவிந்துள்ளது.