உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாள பாடலாசிரியர் பூவாசல் காதர் காலமானார்

மலையாள பாடலாசிரியர் பூவாசல் காதர் காலமானார்

மலையாள சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் பூவாசல் காதர். தமிழில் கண்ணதாசன் கொடி கட்டி பறந்ததை போன்று அவர் காலத்தில் மலையாளத்தில் பிரபலமாக இருந்தவர். 72 வயதான பூவாசல் காதர் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக கே.வி.மகாதேவன், இளையராஜா இசையில் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். பூவாசல் காதருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடல் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !