பிரபாகரன் பள்ளி வாழ்க்கை சினிமா ஆனது
ADDED : 1611 days ago
இலங்கையில் நடந்த போரில் இலங்கை ராணுவத்தை எதிர்த்து போரிட்ட விடுதலைபுலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், இறுதி போரில் அவர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். இவரது வாழ்க்கை வரலாற்று படமாக இதற்கு முன் சில படங்கள் வெளிவந்திருக்கிறது. தற்போது அவரது பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு மேதகு என்ற பெயரில் ஒரு படம் தயாராகி உள்ளது. இந்த திரைப்படம் உலகத்தமிழர்கள் நன்கொடை மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தி.கிட்டு இயக்கி உள்ளார். ரியாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் குமார் இசை அமைத்துள்ளார். பிஎஸ் வேல்யூ என்கிற ஓடிடி தளத்தில் வெளியாகிறது.