மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1533 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1533 days ago
கொரோனா கால ஊரடங்கு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. சின்னத்திரை படப்பிடிப்புகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதோடு புதிய புதிய சீரியல்கள் பற்றிய அறிவிப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் விஜய் டிவியில் 'தமிழும் சரஸ்வதியும்' என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் நக்ஷத்திரா நாகேஷ் மற்றும் தீபக் இணைந்து நடிக்க உள்ளனர்.
12ஆம் வகுப்பு தேர்வை பல முறை எழுதியும் பாஸ் செய்ய முடியாத பெண்ணாக சரஸ்வதி என்ற கேரக்டரில் நக்ஷத்திரா நடிக்கிறார். அவரைப்போலவே படிப்பு ஏறாத தமிழ் என்ற இளைஞனாக தீபக் நடிக்கிறார். படிக்காத இவர்களின் காதலும், வாழ்க்கையும் நகைச்சுவை கலந்து சொல்லப்பட இருக்கிறது. தீபக்கும், நக்ஷத்திராவும் தொகுப்பாளர்களாக இருந்து நடிகர், நடிகை ஆனவர்கள். அதேபோல இருவரும் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்கள்.
1533 days ago
1533 days ago