யுவன் இசையில் பாட தயாராகும் காளிதாஸ் ஜெயராம்?
ADDED : 1595 days ago
நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ், தனது அறிமுகப்படத்தில் இருந்தே மலையாளத்தை விட தமிழ் சினிமாவில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தமிழில் அவர் நடித்த இரண்டு ஆந்தாலாஜி படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளன. மேலும் அடுத்தததாக கிருத்திகா உதயநிதியின் டைரக்சனில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்தநிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ள காளிதாஸ், ‛‛விரைவிலேயே நல்ல சில விஷயங்கள் வரப்போகின்றன” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் நடிகர் சிலம்பரசனையும் டேக் செய்துள்ளார். அனேகமாக யுவனின் இசையில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தில் காளிதாஸ் ஒரு பாடலை பாடுவார் அல்லது பாடியிருக்கலாம் என கூறப்படுகிறது.