சிவாஜி பாடலை பாடி நடனமாடிய வெளிநாட்டினர்
ADDED : 1623 days ago
2007ல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி - ஸ்ரேயா நடிப்பில் வெளியான படம் சிவாஜி. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ஹிட் அடித்தன. இந்தநிலையில், சிவாஜி படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா என்ற பாடலை வெளிநாட்டவர் பாடி அதற்கேற்ப நடனமாடிய ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.ரஜினி, நயன்தாரா நடனமாடிய இந்த பல்லேலக்கா பாடலை நா.முத்துக்குமார் எழுத, எஸ்.பி.பி., பாடியிருந்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது