மேலும் செய்திகள்
தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது
1530 days ago
நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார்
1530 days ago
'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம்
1530 days ago
டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் உள்ள சினிமா, விளையாட்டு பிரபலங்கள் விளம்பர ரீதியில் பதிவிடும் 'போஸ்ட்'களை பணம் வாங்கிக் கொண்டு தான் பதிவிடுவார்கள். அவர்களைத் தொடரும் பாலோயர்களைப் பொறுத்து ஒவ்வொருவரும் வாங்கும் கட்டணம் மாறுபடும்.
அந்த விதத்தில் உலக அளவில் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் இருக்கிறார். ஒரு விளம்பரப் பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அவர் 11.9 கோடி ரூபாயை வாங்குகிறார். பல சினிமா, விளையாட்டு பிரபலங்கள் டாப் பட்டியலில் இருக்கிறார்கள்.
அதில் இந்தியாவிலிருந்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்கள். 65 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள பிரியங்கா சோப்ரா ஒரு பதிவிற்கு 3 கோடி ரூபாயைப் பெறுகிறாராம். இதில் உலக அளவில் 27வது இடத்தை அவர் பிடித்துள்ளார்.
அதே சமயம் 19 இடத்தைப் பிடித்துள்ள விராட் கோலி ஒரு பதிவிற்கு 5 கோடி ரூபாயைப் பெறுகிறாராம். கோலியை இன்ஸ்டாகிராமில் 132 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். உலக அளவில் 100 மில்லியனைத் தொட்ட முதல் இந்தியர், முதல் கிரிக்கெட்டர் என்ற பெருமையைப் பெற்றவர் விராட் கோலி.
பிரியங்காவும், கோலியும் கோடிகளில் வாங்க, தமிழ் சினிமா பிரபலங்கள் சில லட்சங்களை மட்டுமே அதற்காக வாங்குகிறார்கள்.
1530 days ago
1530 days ago
1530 days ago