உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கண்ணனின் அடுத்த படம்

கண்ணனின் அடுத்த படம்

பூமராங் படத்தை அடுத்து மீண்டும் அதர்வாவை வைத்து தள்ளிப்போகாதே என்ற படத்தை இயக்கினார் கண்ணன். இப்படம் இன்னும் வெளிவரவில்லை. இதையடுத்து சந்தானத்தை வைத்து இவர் இயக்கிய பிஸ்கோத்து படம் ரிலீஸாகிவிட்டது. தற்போது எரியும் கண்ணாடி என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பாதிக்கு மேல் வளர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார் கண்ணன். இதில் மிர்ச்சி சிவா, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தபடம் காமெடி கதையில் உருவாகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !