மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1526 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1526 days ago
தமிழ் சினிமாவில் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) இயங்கி வருகிறது. இதில் சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக தற்போது சண்டை இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜாக்குவார் தங்கம் இருக்கிறார்.
இந்த நிலையில் பாலசுப்ரமணியம் என்பவர் கில்டு பெயரிலேயே ஒரு சங்கம் தொடங்கி, அதன் பெயரில் வங்கி கணக்கு ஒன்றையும் தொடங்கி, கில்டு சங்கத்தின் லோகோவையும் பயன்படுத்தி, வருவதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாக்குவார் தங்கம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜாக்குவார் தங்கம் தலைமையில் இயங்கும் சங்கமே கில்டு பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த உரிமை உள்ளது. வேறு எந்த நபரும் கில்டு சங்கத்தின் பெயரையும், சங்கத்தின் லோகோவையும் பயன்படுத்த கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து தீர்ப்பு நகலுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜாக்குவார் தங்கம் அதில் கூறியிருப்பதாவது: எங்கள் சங்கம் தான் உண்மையான சங்கம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரு சில நபர்கள் கில்டு சங்க பொறுப்பில் இருக்கிறோம் என்று கூறிக்கொண்டு சங்கத்திற்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் பல பொய்யான தகவல்களை பரப்பி, உறுப்பினர்களிடம் பணமோசடி செய்து ஏமாற்றி வருகிறார்கள். அவர்களிடம் உறுப்பினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
1526 days ago
1526 days ago