சமந்தாவைத் தொடர்ந்து வெள்ளை கவர்ச்சி உடையில் ரைசா வில்சன்
ADDED : 1640 days ago
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா அடிக்கடி போட்டோஷூட் எடுத்து படங்களை பகிர்வார். எப்போதாவது திடீரென கவர்ச்சி படங்களால் பரபரப்பையும் ஏற்படுத்துவார். தற்போது வெள்ளை நிற உடையில் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து நடிகை ரைசா வில்சனும் மினுமினுக்கும் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார். கடற்கரையில் நிற்பது போன்ற அந்த படங்களில் கவர்ச்சியாக நின்று போஸ் கொடுத்துள்ளார். இந்த வெள்ளை உடை சவால் தொடருமா? ரைசாவுடன் நின்று விடுமா? என்று தெரியவில்லை.