மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
1524 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
1524 days ago
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1524 days ago
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தியேட்டரில் வெளியாகி பின்னர் கொரோனா காரணமாக ஓடிடியிலும் வெளியான மலையாள படம் கப்பேலா. முகம்மது முஸ்தபா இயக்கி இருந்தார். அன்னா பென், ஸ்ரீநாத் பாஸி, ரோஷன் மேத்யூ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரிய அளவில் பாராட்டை கொடுத்த படம் இது.
தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்படிப்பு துவக்க விழா நேற்று நடந்தது. சவுரி சந்திரசேகர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் மூலம் அர்ஜூன்தாஸ் தெலுங்கில் அறிமுகமாகிறார். கைதி, மாஸ்டர் படங்கள் மூலம் புகழ்பெற்ற அர்ஜூன்தாஸ் தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
அர்ஜூன் தாசுடன் சித்து ஜொன்னலகட்டா நடிக்கிறார். அன்னா பென் நடித்த கேரக்டரில் முக்கிய நடிகை ஒருவர் நடிக்கிறார். அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
1524 days ago
1524 days ago
1524 days ago