உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டோக்கியோ ஒலிம்பிக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் முதன் முறையாக தமிழ்நாட்டில் இருந்து 11 வீரர்கள் ஒலிம்பிக்கிற்கு செல்கிறார்கள்.

இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர்கள், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் நமது நாட்டின் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஹிந்துஸ்தானி வே என்ற பாடல் தயாராகி உள்ளது. என்று பதிவிட்டிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை அனன்யா பாடியுள்ளார். இந்த பாடல் நாளை (9ம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஒலிம்பிக் போட்டி, ஆசிய தடகள போட்டி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐபிஎல் கிரிக்கெட் போன்றவற்றுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !