எம்ஜிஆர்., என்டிஆர்., உடன் நட்பில் இருந்த திலீப் குமார்
ADDED : 1647 days ago
பாலிவுட்டின் மூத்த நடிகர் திலீப் குமார்(98) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நல கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மறைந்தார். அவருக்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்திய திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அவரின் 55 ஆண்டுகால சினிமா வரலாற்றில் அவர் நடித்தது 65 படங்கள் தான். ஆனால் அவை மறக்க முடியாத படங்களாக அமைந்தன.
மறைந்த திலீப் குமார் அந்தக்கால தென்னிந்திய ஜாம்பாவன் நடிகர்களுடன் உடன் நல்ல நட்பில் இருந்துள்ளார் என்பதற்கு மேலே உள்ள போட்டோக்களே சான்று. மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், மக்கள் திலகம் எம்ஜிஆர்., உடனும் ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது முதல்வராகவும், கடைகோடி மக்களின் அபிமான நடிகராகவும் இருந்த என்டிஆர்., உடனும் திலீப் எடுத்த போட்டோக்கள் இப்போது வைரலாகின.