ஜூலை 22ல் சார்பட்ட பரம்பரை ஒடிடியில் ரிலீஸ்
ADDED : 1598 days ago
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னை பாக்சர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்து தனது உடல்கட்டையும் மாற்றி நடித்துள்ளார் ஆர்யா. ஆர்யாவுடன் துஷாரா, கலையரசன், பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்துக்கட்ட பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் தியேட்டரில் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா அலை காரணமாக ஓடிடியில் இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்தன. இப்போது ஜூலை 22ல் அமேசான் ஓடிடி தளத்தில் படம் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.