வைரலாகும் சூர்யா - பிரயாகா புகைப்படம்
ADDED : 1597 days ago
மணிரத்னம் உள்ளிட்ட ஒன்பது பிரபல இயக்குனர்கள் இயக்கும் ஒன்பது குறும்படங்கள் உள்ளடங்கிய 'நவரசா' என்கிற ஆந்தாலாஜி படம் உருவாகி வருகிறது. அதில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் ஒன்று. இதற்கு கிதார் கம்பி மேலே நின்று என டைட்டில் வைத்துள்ளார்கள். வாரணம் ஆயிரம் படத்தை தொடர்ந்து, கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இந்த குறும்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
சூர்யா ஜோடியாக பிரயாகா மார்ட்டின் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்தப்படத்தின் புகைப்படம் அதை உறுதிப்படுத்தியுள்ளது. வழக்கமான கவுதம் மேனன் பட பாணியில் ரொமாண்டிக் ஜானரில் இந்தப்படம் உருவாகியுள்ளது என்பது, சூர்யாவை பிரயாகா மார்ட்டின் காதல் பொங்கும் பார்வையில் பார்க்கும்போதே தெரிகிறது.