உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பீகே படத்தின் நெகட்டிவ்வை ஒப்படைத்த ராஜ்குமார் ஹிரானி

பீகே படத்தின் நெகட்டிவ்வை ஒப்படைத்த ராஜ்குமார் ஹிரானி

கடந்த 2014ல் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் பீகே. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவான இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆமிர்கான் நாயகனாக நடித்திருந்தார். அனுஷ்கா சர்மா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப்படம் ஒருபக்கம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது என்றால், இன்னொரு பக்கம் இந்து கடவுள்களை இழிவுபடுத்தி விட்டதாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பையும் சம்பாதித்தது. அதேசமயம் வசூலையும் வாரி குவித்தது.

இந்தநிலையில் இந்தப்படத்தின் ஒரிஜினல் நெகடிவ்வை சமீபத்தில் இந்திய தேசிய திரைப்பட காப்பகம் (NFAI) வசம் ஒப்படைத்துள்ளார் ராஜ்குமார் ஹிரானி. இதுபற்றி அவர் கூறும்போது, “ஒவ்வொரு இயக்குனரும் தங்களது படத்தின் ஒரிஜினல் நெகடிவ்வை தமக்குப்பின் வரும் சந்ததியினருக்காகவும் திரைப்பட உருவாக்கம் குறித்து கற்கும் அடுத்த தலைமுறை மாணவர்களுக்காகவும் பாதுகாத்து வைக்க வேண்டியது அவர்களுடைய கடமை.. மற்ற இயக்குனர்களுக்கும் இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்” என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !