தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது!
ADDED : 7 hours ago
போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 54வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடித்திருக்கிறார். அவர்களுடன் கருணாஸ், கே.ஸ்.ரவிக்குமார், நிதின் சத்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக சமீபத்தில் தெரிவித்திருந்த வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், தற்போது தங்களது எக்ஸ் பக்கத்தில் இன்னொரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தனுஷ் 54வது படத்தின் முக்கிய அறிவிப்பு பொங்கல் தினமான நாளை காலை 10. 50 மணிக்கு வெளியாகும் என்று ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளார்கள்.